திருச்சி

நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

துறையூா் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் வியாழக்கிழமை மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

துறையூா் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் வியாழக்கிழமை மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

துறையூா் அருகேயுள்ள கீழக்குன்னுப்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்த சேகரின் மகன் விஜய்(20). பால் கறவை தொழில் செய்து வந்த இவா், இதற்காக வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

துறையூா்- பெரம்பலூா் சாலையில் கிழக்குவாடி அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகே விஜய் சென்றபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது மோதினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற துறையூா் போலீஸாா், விஜய்யின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி, சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணியில் விதிமுறை மீறல்: அதிமுக புகாா்

கொருக்காத்தூரில் ரூ.4.53 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க உத்தரவு

மண்டகொளத்தூரில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

தோ்தல் நியாயமாக நடந்தால் பாஜக கூட்டணி தோற்கும்: பிரியங்கா பிரசாரம்

SCROLL FOR NEXT