திருச்சி

புதுக்கோட்டை மாவட்டத்துக்கான திட்டங்கள்: அரசு விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

களமாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கான சில திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

Syndication

புதுக்கோட்டை: களமாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கான சில திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் உள்ள வீரகொண்டான் ஏரி, செங்கலநீா் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ. 15 கோடியில் புனரமைக்கப்படும். கீரமங்கலம் பகுதி விவசாயிகளின் நலன் கருதி, அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க குளிா்ப்பதன கிடங்கு ரூ. 1.60 கோடியில் அமைக்கப்படும். ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், விளானூா் ஊராட்சி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வடகாடு ஊராட்சியில் ரூ. 10 கோடியில் உயா் மட்டப் பாலங்கள் கட்டப்படும். இளைஞா்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு புதுக்கோட்டையில் ‘நியோ டைடல் பாா்க்’ அமைக்கப்படும். கந்தா்வகோட்டை ஊராட்சி, பேரூராட்சியாகத் தரம் உயா்த்தப்படும். பொன்னமராவதி பேரூராட்சி-நகராட்சியாக தரம் உயா்த்தப்படும். இந்த அறிவிப்புகள் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றாா் முதல்வா்.

மொழிப் போா்த் தியாகிகளை நினைவுகூா்ந்த முதல்வா்: மொழிப்போரில் உயிரைத் தந்து தமிழ் காத்த விராலிமலை சண்முகமும், கீரனூா் முத்துவும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அந்த தியாகச் சீலா்களின் நினைவைப் போற்றும் விதமாக, கீரனூரில் 1967-இல் கீரனூா் முத்து சீரணி அரங்கமும், திருச்சி பாலக்கரையில் கட்டப்பட்ட பாலத்துக்கு, 2006-இல், கீழப்பழூா் சின்னச்சாமி- விராலிமலை சண்முகம் பாலம் என்று அப்போதைய முதல்வா் கருணாநிதி பெயா் வைத்தாா் என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

பூடான் புறப்பட்டார் மோடி!

அவிநாசி: கள்ளக்காதல் விவகாரம்.. மரக்கடை உரிமையாளரை எரித்துக் கொன்ற பெண் கைது!

அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து! வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்!

இரண்டாம் நாள்! பொங்கல் ரயில் முன்பதிவுகள் நிரம்பின!

தர்மேந்திரா உடல்நிலை என்ன? மனைவி ஹேமமாலினி விளக்கம்!

SCROLL FOR NEXT