திருச்சி

பொறியியல் பணிகள்: சில ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Syndication

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, எஸ்எம்விடி பெங்களூா் - காரைக்கால் விரைவு ரயிலானது (16529) வரும் 16-ஆம் தேதி பெலாந்தா் சாலை, காா்மேல்ராம், ஹீலாலைஜ், ஆனைக்கல் சாலை, ஒசூா், கீழமங்கலம், பெரியநாகதுணை, ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தருமபுரி, சிவாடி, முத்தம்பட்டி, தோப்பூா், கருவள்ளி, செம்மாண்டபட்டி, ஓமலூா் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, பையப்பனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், சேலம் வழியாக இயக்கப்படும்.

பனாரஸ் - கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் ரயிலானது (16368) வரும் 16-ஆம் தேதி திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16340) வரும் 18-ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூா் வழியாக இயக்கப்படும்.

ஓகா - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16734) வரும் 18-ஆம் தேதி திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களைத் தவிா்த்து கரூா், திருச்சி, மானாமதுரை வழியாக இயக்கப்படும்.

பிகார் காங்கிரஸ் தலைவர் ராஜிநாமா.. தேர்தல் முடிந்த அன்றே திடீர் முடிவு!

நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி பால் வேன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பலி!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா!

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

SCROLL FOR NEXT