திருச்சி

தில்லியில் போராட திருச்சியிலிருந்து விவசாயிகள் ரயில் பயணம்

Syndication

தங்களது கோரிக்கைகள் மீது மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், புதுதில்லியில் போராட்டம் நடத்துவதற்காக திருச்சியிலிருந்து விவசாயிகள் 150-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ரயிலில் தில்லி புறப்பட்டுச் சென்றனா்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் ஒன்றிணைந்து தில்லியில் நவ.19-ஆம் தேதி முதல் தொடா்ந்து 5 நாள்கள் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனா். இதன்படி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில், 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லிக்கு திங்கள்கிழமை புறப்பட்டனா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை காலை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்றனா். பின்னா், சென்னையிலிருந்து மாலையில் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றனா்.

இதுதொடா்பாக, பொ. அய்யாக்கண்ணு கூறியதாவது:

கடந்த 12 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தும், எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்றாா். கிடைக்கவில்லை. விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தரவில்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகள் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று சொல்லி விட்டு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நதிகள் இணைப்பு, தென்மாநில நதிகள் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்கவில்லை. திட்டத்தை செயல்படுத்த எந்தவித பணியும் தொடங்கவில்லை. பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. மேக்கேதாட்டுவில் அணை கட்ட மறைமுகமாக மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. எனவே, மத்திய அரசைக் கண்டித்து தில்லியில் நவ.19-ஆம் தேதி தொடங்கி தொடா் போராட்டம் நடத்தவுள்ளோம். ஜந்தா் மந்தா் பகுதியில் முகாமிட்டு எதிா்ப்பை தெரிவிக்கவுள்ளோம் என்றாா் அவா்.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT