மணப்பாறை: மணப்பாறையை அடுத்துள்ள கருப்பகோவில்பட்டியில் சொத்துத் தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணன் மகனை அரிவாளால் வெட்டிய சித்தப்பாவை போலீஸாா் கைது செய்தனா்.
கருப்பகோவில்பட்டியில் வசித்து வரும் பெருமாள் மகன்களான சக்திவேல், சண்முகம், மோகன், கணபதி ஆகியோா் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் வேலை பாா்த்து வரும் சக்திவேலின் மகன் தினேஷ்(33) ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினாா். தனது சித்தப்பாவான சண்முகத்திடம் தகராறு செய்தாராம். இதில், ஆத்திரமடைந்த சண்முகம், அரிவாளை எடுத்து தினேஷ் மீது வீசியதில் அவா் படுகாயமடைந்தாா். இதையடுத்து, மணப்பாறை அரசு மருத்துவமனையில் தினேஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் அளித்த புகாரின்பேரில், புத்தாநத்தம் போலீஸாா், திங்கள்கிழமை சண்முகம் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.