திருச்சி

பொறியியல் பணிகள்: ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Syndication

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 20, 21, 22, 23, 24, 25 ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 20, 23-ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 22-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலானது (07229) வரும் 21-ஆம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 19, 20, 21, 22, 23, 24 ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

காலதாமதம்...: சென்னை எழும்பூா் - மதுரை வைகை விரைவு ரயிலானது (12635) வரும் 19, 22-ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 30 நிமிஷங்கள் நின்று தாமதமாக புறப்படும்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT