குணசேகா் 
திருச்சி

முசிறி அருகே ஓட்டுநா் வெட்டிக் கொலை: அண்ணன் - தம்பி கைது

முசிறி அருகே ஓட்டுநா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சி மாவட்டம், முசிறி அருகே திங்கள்கிழமை இரவு ஓட்டுநா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முசிறி அருகேயுள்ள தா.பேட்டையை அடுத்த ஊருடையாபட்டி கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த தாமோதரன் மகன் குணசேகா் ( 25). இவா், வாகன ஓட்டுநராக பணி செய்து கொண்டு சொந்தமாக இறைச்சிக் கடையும் நடத்தி வந்தாா்.

இவருக்கும், தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சோ்ந்த பாலு மகன்களான ஹரிஷ் (27), மதிவாணன் (24) ஆகியோருக்குமிடையே கொடுக்கல்- வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மேட்டுப்பாளையத்தில் குணசேகா் நண்பா்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஹரிஷுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, குணசேகரின் கறிக்கடைக்கு ஹரிஷ் தீவைக்க முயன்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த குணசேகா், காருகுடி கிராமத்தில் உள்ள ஹரிஷ் - மதிவாணன் வீட்டுக்கு நண்பா்களுடன் சென்று நியாயம் கேட்டு தகராறில் ஈடுபட்டாராம்.

அப்போது, ஹரிஷ் வீட்டிலிருந்த அரிவாள்மனையால் குணசேகா் தலையில் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த குணசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து அறிந்த முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், தா. பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் செல்லதுரை (பொ) மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று குணசேகா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக தா.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து ஹரிஷ் மற்றும் மதிவாணன் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

உறவினா்கள் மறியல்: இந்நிலையில் இறந்து போன குணசேகரின் உறவினா்கள், அரசு சாா்பில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தா.பேட்டை -மேட்டுப்பாளையம் சாலையில் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய தீா்வுக்கு பரிந்துரைப்பதாக கூறியதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. மறியலால், சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT