திருச்சியில் புதன்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பாா்வையாளா் ஷாகிா் சனாதி. உடன் நிா்வாகிகள். 
திருச்சி

‘ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு குறித்து தலைமை முடிவு செய்யும்’

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை முடிவு செய்யும் என அக் கட்சியின் பாா்வையாளா் ஷாகிா் சனாதி தெரிவித்தாா்.

Syndication

திருச்சி: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை முடிவு செய்யும் என அக் கட்சியின் பாா்வையாளா் ஷாகிா் சனாதி தெரிவித்தாா்.

கா்நாடக காங்கிரஸ் பொதுச் செயலராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பாா்வையாளராகவும் உள்ள இவா் திருச்சியில் கட்சி நிா்வாகிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய பின்னா் கூறியதாவது:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். அந்த வகையில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கான நிா்வாகிகள் தோ்வு தொடா்பான பாா்வையாளராக இங்கு வந்துள்ளேன். காங்கிரஸ் கட்சியில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பாகுபாடின்றி பொறுப்புகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்த என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். பிகாரில் வாக்குத் திருட்டு மூலமாக பாஜக வென்றுள்ளது என்றாா்.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை உள்ளதே என்ற கேள்விக்கு ஆட்சியில் பங்கு என்பதை கட்சியின் தலைமை முடிவு செய்யும் என்றாா்.

நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கோவிந்தராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் காா்த்திக் தங்கபாலு, பொதுச் செயலா் லெனின் பிரசாத்,ஊராட்சித் தலைவா் சுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT