முகப்பு
தமிழ்நாடு

ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் - மாணிக்கம்தாகூர்

திருப்பரங்குன்றம் : தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் என அக்கட்சி எம்.பி. மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:14 AM
மாணிக்கம்தாகூர் - முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:12 AM

திருப்பரங்குன்றம் : தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் என அக்கட்சி எம்.பி. மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகையும், நானும் அண்ணன், தம்பி போன்றவர்கள். எங்களுக்குள் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை. இதைப் பெரிதாக்க வேண்டாம்.

Advertisement

காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் நன்மைக்காகப் போராடுகிறது. எங்களைப் பொருத்தவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:13 AM

தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் திமுக ஆட்சியமைக்க முடியாது என தவெக இணை பொதுச் செயலர் நிர்மல்குமார் கூறியது அவருடைய சொந்தக் கருத்து. ராகுல் காந்தி, கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியை பலமான கட்சியாக உருவாக்க நானும் முயற்சி செய்கிறேன். ஆட்சியில் பங்கு குறித்து ராகுல் காந்தியின் கருத்து என்ன என்பதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். இதுகுறித்து கடந்த ஜன. 17}ஆம் தேதி தலைமையிடம் பேசினேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.