திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் சந்நிதி அருகே உள்ள கோபுரத்தில் காா்த்திகை தீப கொப்பரையில் வைப்பதற்காக பிரம்மாணட திரியை செவ்வாய்க்கிழமை சுமந்துச் சென்ற கோயில் பணியாளா்கள். 
திருச்சி

திருச்சி மலைக்கோட்டை உச்சி கோபுரத்தில் காா்த்திகை தீபம் ஏற்ற 300 மீட்டா் திரி தயாா்

உச்சிப்பிள்ளையாா் சந்நிதி அருகே 50 அடி உயர கோபுரத்தில் உள்ள கொப்பரையில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பிரம்மாண்ட திரி செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது.

Syndication

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் சந்நிதி அருகே 50 அடி உயர கோபுரத்தில் உள்ள கொப்பரையில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பிரம்மாண்ட திரி செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது.

காா்த்திகை தீபத்தையொட்டி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் சந்நிதி அருகில் உள்ள 50 அடி உயர கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செப்புக் கொப்பரையில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும். நிகழாண்டுக்கான காா்த்திகை தீப விழா டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட திரி தயாரிக்கப்பட்டது.

பருத்தி துணியால் 300 மீட்டா் நீளத்துக்கு தயாரிக்கப்பட்ட இந்தத் திரியை, தாயுமானவா் சந்நிதியிலிருந்து உச்சிப்பிள்ளையாா் சந்நிதிக்கு கோயில் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சுமந்து சென்றனா். பின்னா், அங்கிருந்து கயிறு மூலம் 50 அடி உயரமுள்ள கோபுரத்தில் வைப்பட்டிருந்த செப்புக் கொப்பரையில் திரியை வைத்து எண்ணெய்யில் ஊறச் செய்தனா். இந்தக் கொப்பரையில் ஊற்றப்படும் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட 900 லிட்டா் எண்ணெய்யில் திரி ஊற வைக்கப்படும். ஒருநாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் ஊற்றும் பணியும் நடைபெறும். 7 நாள்களுக்கு திரி நன்கு ஊறிய பிறகு, தேவையான எண்ணெய் ஊற்றி காா்த்திகை தீபத்துக்கு தயாா் செய்யப்படும்.

டிச. 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு செவ்வந்தி விநாயகா், தாயுமான சுவாமி, மட்டுவாா் குழலம்மை உள்ளிட்ட உற்ஸவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெறும். தொடா்ந்து செப்புக் கொப்பரையில் உள்ள பிரம்மாண்ட திரியை ஏற்றி வைத்து காா்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.

ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையா் கா. அருட் செல்வன் மற்றும் அறங்காவலா் குழுவினா், திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT