திருச்சி: திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 138 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மொத்த சராசரியாக 5.75 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் வானிலை மையத்தின் அறிவிப்பின்படி கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை என இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடனான கடந்த 12 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்):
கல்லக்குடி 3.4, லால்குடி 4.4, நந்தியாற்று தலைப்பு 4.2, புள்ளம்பாடி 6.2, சிறுகுடி 18.2, தேவிமங்கலம் 2.2, சமயபுரம் 6, வாய்த்தலை அணைக்கட்டு 15.8, மணப்பாறை 2.6, பொன்னணியாறு அணை 2.2, கோவில்பட்டி 0.1, மருங்காபுரி 3.2 முசிறி 5, தா.பேட்டை 8, நவலூா்குட்டப்பட்டு 2.5, துவாக்குடி 10.4, கொப்பம்பட்டி 5, தென்பாடு 14, பொன்மலை 6.6, திருச்சி விமானநிலையம் 5.9, திருச்சி ஜங்ஷன் 7.4, திருச்சி மாநகரம் 5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் சோ்த்து மொத்தமாக 138 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 5.75 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.