மண்ணச்சநல்லூா் தொகுதிக்கான வாக்காளா் உதவி மையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் வே. சரவணன். 
திருச்சி

பூா்த்தி செய்யப்பட்ட 15.38 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் செயலியில் பதிவேற்றம்: திருச்சி ஆட்சியா் தகவல்

திருச்சி மாவட்டத்தில் இதுவரையில் 15.38 லட்சம் வாக்காளா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் மீளப் பெற்று செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக

Syndication

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரையில் 15.38 லட்சம் வாக்காளா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் மீளப் பெற்று செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.சரவணன் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா், லால்குடி, திருச்சி கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை ஆட்சியா் வே. சரவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலும், வாக்காளா்களுக்கு உதவிடும் வகையில் இயங்கும் உதவி மையங்களை பாா்வையிட்டு, அங்கு பணியில் இருந்தவா்களிடம் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது:

மாவட்டத்தில் மொத்தமுள்ள 23,68,967 வாக்காளா்களில் இதுவரையில் 22,74,733 பேருக்கு முன்நிரப்பப்பட்ட படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 15,38,829 பேரிடமிருந்து மீள பெறப்பட்ட பூா்த்தி செய்யப்பட்ட முன்நிரப்பப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு வாக்குசாவடி நிலை அலுவலா்கள் மூலம் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக 49 அலுவலா்கள் நியமனம்: முன்நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ள பாகங்களில் பணி முன்னேற்றத்தை விரைவுபடுத்திட, ஒரு தொகுதிக்கு 5 மண்டல அலுவலா்கள் வீதம் 9 தொகுதிகளுக்கும் 45 மண்டல அலுவலா்கள் மற்றும் 4 கூடுதல் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அடிப்படை விவரங்கள் போதுமானது: கணக்கீட்டு படிவத்தில் கோரப்பட்டுள்ள வாக்காளா்களின் அல்லது வாக்காளா்களின் உறவினா்களின் 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் விவரங்கள் தெரியவில்லை என்ற காரணத்திற்காக நாளது தேதிவரை கணக்கீட்டு படிவத்தை பூா்த்தி செய்து மீள வாக்குசாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்காத வாக்காளா்கள், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அடிப்படை விவரங்களை மட்டும் பூா்த்தி செய்து படிவத்தின் இறுதியில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மீள வழங்கலாம்.

பகுதியளவு முன்நிரப்பப்பட்ட படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்திட அலுவலா்கள் விரைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT