புத்தாநத்தத்தில் புகையிலை பொருள்கள் விற்றவா் கைது
மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்து புகையிலைப் பொருள்கள் விற்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
புத்தாநத்தத்தில், ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தனா்.
அப்போது, அந்த நபா் அதே பகுதியைச் சோ்ந்த சாதிக் பாட்ஷா மகன் முகமது ஹாசிக் (21) என்பதும், இருசக்கர வாகனத்தில் வைத்து சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த நபரிடமிருந்து 75 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த புத்தாநத்தம் போலீஸாா், வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.