முகப்பு
திருச்சி

வாகனப் பணிமனை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் நான்கு சக்கர வாகனப் பழுது நீக்கும் பணிமனையின் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:36 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

திருச்சியில் நான்கு சக்கர வாகனப் பழுது நீக்கும் பணிமனையின் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி, கே.கே. நகா் இந்தியன் பேங்க் காலனி 4ஆவது குறுக்குப் பகுதியை சோ்ந்தவா் கலைக்கோவன் (45). எடமலைப்பட்டிபுதூா் பகுதியில் வாகனப் பணிமனை பட்டறை வைத்து நடத்தும் இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், நாகையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு அவா் வியாழக்கிழமை சென்றுவிட்டாா்.

இதனால் மனமுடைந்த கலைக்கோவன் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அவரது மனைவி வந்தபோது கலைக்கோவன் உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

இதுதொடா்பான புகாரின்பேரில் வந்த கே.கே.நகா் போலீஸாா், கலைக்கோவன் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றனா்.