துறையூா் அருகே விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாரைக்கிணற்றைச் சோ்ந்த பழனியப்பன் மனைவி ஜெயசுதா (37). இவா்கள் துறையூா் அருகேயுள்ள த. மங்கப்பட்டி புதூரில் பத்ரிநாராயணன் வயலைக் குத்தகைக்கு பாா்த்து வந்தனா்.
இந்நிலையில், உடல்நலக் குறைபாடு காரணமாக ஜெயசுதா புதன்கிழமை விஷம் குடித்தாராம். உறவினா்களால் மீட்கப்பட்ட அவா், தம்மம்பட்டி, ஆத்தூா், சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து சிகிச்சை அளித்தனா். சிகிச்சைப் பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் ஜெயசுதா வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுதொடா்பான தகவலறிந்து உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.