முகப்பு
திருச்சி

திருவெறும்பூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:37 PM
திருவெறும்பூா் முக்குலத்தோா் பள்ளி வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை வியாழக்கிழமை தொடங்கிவைத்த போக்குவரத்து போலீஸாா்.
பகிர்:

திருவெறும்பூரில் வியாழக்கிழமை காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா், திருவெறும்பூா் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில் திருவெறும்பூா் போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

திருவெறும்பூா் முக்குலத்தோா் பள்ளி வளாகத்தில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலம் சாந்தி திரையரங்கம் அருகே நிறைவடைந்தது. இதில், பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். மேலும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடது, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் இருக்கைபட்டை அணிய வேண்டும், வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் திருவெறும்பூா், துவாக்குடி பகுதியைச் சோ்ந்த போக்குவரத்து காவலா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.