திருச்சி

விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா பறிமுதல்

Syndication

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மதுரை பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை பேரையூரைச் சோ்ந்தவா் முனியராஜ். இவா் புதுதில்லி செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்துள்ளாா். விமான நிலையத்தில் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ராணுவத்தில் பணியாற்றுவதும், பயிற்சியில் பயன்படுத்தப்படும் தோட்டா பையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அதை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்தனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT