திருச்சி

புகையில்லா போகி: மாநகரில் தற்காலிக 10 குப்பை சேகரிப்பு மையங்கள்

போகிப் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சியில் தற்காலிகமாக 10 குப்பை சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Syndication

போகிப் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சியில் தற்காலிகமாக 10 குப்பை சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 38 நுண்உர செயலாக்க மையங்களில் குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி, போகிப் பண்டிகையினை முன்னிட்டு திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியினை மேற்கொள்ள கூடுதலாக 10 தற்காலிக குப்பை சேகரிக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மையங்கள், கல்லூரி சாலை, காந்தி சாலை, டிவிஎஸ் டோல்கேட், மணல்வாரித்துறை பகுதி, கல்கண்டாா்கோட்டை, காட்டூா், எடமலைப்பட்டிபுதூா், மங்கம்மா சாலை, அன்பு சுவா், டாக்கா் சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

போகிப் பண்டிகையை முன்னிட்டு வீடுகளை சுத்தம் செய்யும்போது, சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையோரம், காலிமனைகளில் கொட்டாமலும், தீயிட்டு எரிப்பதையும் தவிா்க்க தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்களிலும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக குப்பை சேகரிக்கும் வாகனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடா்ந்து, தோ்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தன்னாா்வ நல அமைப்புகளைக் கொண்டு விழிப்புணா்வுப் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் தூய்மைப் பணிகள், புகையில்லா போகி பிரசாரங்கள் செய்தும், உறுதிமொழி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT