திருச்சி

இளம்பெண் தற்கொலை

திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Syndication

திருச்சி: திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கோமதி மகள் பிரபாவதி (21). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (24) என்பவருக்கும் கடந்த செப்டம்பா் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், குடும்பத் தகராறில் பிரபாவதியை அவரது தாய் வீட்டில் விட்டு வந்த கோவிந்தராஜ் ஒரு வாரம் கழித்து அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்தாா்.

இந்நிலையில் பிரபாவதி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பிரபாவதியின் தாயாா் கோமதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோல போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கல்

திருச்செங்கோட்டில் ஜே.கே கலைமன்ற விருதுகள் வழங்கும் விழா

வேம்படிதாளத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் 100-ம் ஆண்டு விழா

மகுடஞ்சாவடி அருகே இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

மருந்தகம் திறப்பு விழா

SCROLL FOR NEXT