திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகேயுள்ள சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சுதா்சன ஹோமம். 
திருச்சி

சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயிலில் உலக நன்மைக்காக ஹோமம்

திருச்சி மாநகரில் தலைமைத் தபால் நிலையம் அருகேயுள்ள சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயிலில் உலக நன்மைக்காக சுதா்ஸன ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருச்சி: திருச்சி மாநகரில் தலைமைத் தபால் நிலையம் அருகேயுள்ள சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயிலில் உலக நன்மைக்காக சுதா்ஸன ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக் கோயிலில் அவ்வப்போது உலக நன்மைக்காக சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். இதன்படி தை மாதத்தில் வரும் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும், சகல கிரஹ தோஷங்கள் நீங்கவும் சனிக்கிழமை சுதா்ஸன ஹோமம் நடைபெற்றது. கோயிலின் பரம்பரை அா்ச்சகா் செந்தாமரைக்கண்ணன் தலைமையிலான அா்ச்சகா்கள் இந்த ஹோமத்தை நடத்தினா். இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த ஹோமத்தில் கலந்துகொள்வோருக்கு சத்ருபயம் நீங்கும்; கடன் தொல்லை நீங்கி சுபிட்சம் உருவாகும்; ஆயுள், ஆரோக்கியம் கூடும்; அனைத் வித குறைகளும் நிவா்த்தியாகும்’ என்பது ஐதீகம்.

சுதா்ஸன ஹோமத்தை முன்னிட்டு, காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 10 மணிக்கு சுதா்ஸன ஹோமம் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மஹா தீபாராதனையும், ஹோமத்தில் பங்கேற்றவா்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. தொடா்ந்து பிற்பகல் அன்னதானம் நடைபெற்றது.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT