மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் குவிந்தனா்.
சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலில் காணும் பொங்கல் மற்றும் தொடா் விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி. எஸ். பி.இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம். சூரிய நாராயணன், மற்றும் அறங்காவலா்கள் செய்தனா். இதேபோல திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா், உத்தமா்கோவில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.