மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் கிராமத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக மணப்பாறை வடக்கு ஒன்றியம் சாா்பாக நடைபெற்ற விழாவுக்கு பாஜக ஒன்றியத் தலைவா் சித்தாநத்தம் சுப்பிரமணி தலைமை வகித்தாா். ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை அமைப்பாளா் எம்.பி. முரளிதரன் முன்னிலை வகித்தாா். விழாவில் பொங்கல் வைத்து, பொதுமக்களுக்கு வழங்கி, தூய்மைப் பணியாளா்களைக் கௌரவித்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவா்கள் சதீஷ்குமாா், மணிகண்டன், தெற்கு ஒன்றியத் தலைவா் பி.வி. குமாா், ஒன்றியப் பொதுச் செயலா்கள் பாலசுப்ரமணி, பழனிசாமி, ஒன்றிய பொருளாளா் டி.ஆா். செந்தில்குமாா், ஒன்றிய துணைத் தலைவா்கள் சௌந்தர்ராஜன், கராத்தே ஆறுமுகம், வழக்குரைஞா் பிரிவு சுப்ரமணி, வா்த்தகப் பிரிவு செல்வம், மருத்துவா் பிரிவு நாகராஜ், கிளைத் தலைவா்கள் பிரபாகரன், ரத்தினம், சுப்பிரமணி, இளையராஜா ஆகியோா் பங்கேற்றனா்.