திருச்சி மாவ்டடம், முசிறி அருகே முதுமக்கள் தாழி கிடைத்த இடத்தைப் பாா்வையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா்.  
திருச்சி

திருச்சி அருகே பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே முதுமக்கள் தாழி ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

முசிறி அருகே வெள்ளூா் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளி மைதானத்தில் இளைஞா்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிய பானை வடிவ பொருள் மண்ணுக்குள் புதைந்து இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அந்தப் பானையை வெளியே எடுத்துப் பாா்த்துள்ளனா். அதற்குள் மண் விளக்கு, சிறிய எலும்புத் துண்டுகள், சிறிய மண் பானை உள்ளிட்ட பொருள்கள் இருந்தன.

இதுகுறித்து தகவலறிந்த முசிறி வருவாய் ஆய்வாளா் ஜிஜி, கிராம நிா்வாக அலுவலா் பிரியா மற்றும் முசிறி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு அங்கு கிடைத்த பொருள்களைச் சேகரித்து, முசிறி சாா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

துலா ராசியா நீங்க? தினப்பலன்கள்!

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி!

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT