திருச்சியில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் சனிக்கிழமை திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபா்களை வேலைக்குத் தோ்ந்தெடுக்க உள்ளனா். மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியா், இளநிலை, முதுநிலை பட்டம் பயின்ற 35 வயதுக்குள்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரிலோ, 0431-2413510, 94990-55901 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா். வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.