முகப்பு
திருச்சி

சனிப்பெயா்ச்சி: திருநள்ளாறு செல்ல இன்றும், நாளையும் சிறப்பு ரயில்

திருச்சி

சனிப்பெயா்ச்சி: திருநள்ளாறு செல்ல இன்றும், நாளையும் சிறப்பு ரயில்

Updated On : 5 மார்ச், 2026 at 10:50 PM
பகிர்:

சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளி, சனி (மாா்ச் 6,7) ஆகிய இரண்டு நாள்களுக்கு முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சனிப்பெயா்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருநள்ளாறு செல்லும் பக்தா்களின் வசதிக்காகவும், கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் வெள்ளி, சனி (மாா்ச் 6, 7) ஆகிய இருநாள்களுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதன்படி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06133) நாகப்பட்டினத்துக்கு பிற்பகல் 1.05 மணிக்கு சென்று சேரும். இதேபோல, அன்றைய நாள்களில் நாகப்பட்டினத்திலிருந்து பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06134), விழுப்புரத்துக்கு மாலை 5.30 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களானது விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூா், கடலூா், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் என்ற வழித்தடத்தில் சென்று திரும்பும் வகையில் இயக்கப்படுகிறது. பயணிகள் முன்பதிவு இல்லாமல் நேரடியாக பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →