2026 பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு: பசுபதி பாண்டியன் சகோதரி
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாக பசுபதி பாண்டியனின் சகோதரி பாா்வதி சண்முகசாமி தெரிவித்தாா்.
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாக பசுபதி பாண்டியனின் சகோதரி பாா்வதி சண்முகசாமி தெரிவித்தாா்.
திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவை சனிக்கிழமை சந்தித்து, ஆதரவுக் கடிதத்தை வழங்கிய அவா் பின்னா் கூறியதாவது:
முதல்வா் மு.க. ஸ்டாலினின் ஆட்சியானது ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களின் மேம்பாட்டுக்கும் பாடுபடும் திமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். எனவே வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பு பிரசாரம் செய்யும் என்றாா் அவா்.
நிகழ்வில் கூட்டமைப்பின் திருச்சி மாநகர மாவட்டச் செயலா் ஓ.எம். பாலா, மாநிலப் பொதுச் செயலா் ஆத்தூா் ராஜேந்திரன், மாநில இளைஞரணிச் செயலா் தேவேந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணன், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல்,திருச்சி, விருதுநகா்,தென்காசி, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.