முகப்பு
திருச்சி

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை: கே.எம். காதா் மொகிதீன் பேட்டி

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எப்போதும் இடமில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:40 PM
கே.எம். காதா் மொகிதீன்.
பகிர்:

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எப்போதும் இடமில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

திருச்சியில் உள்ள ஈத்கா திடலில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புனித ரமலான் மாதத்தில் நாம் எல்லோரும் இறைவனை வேண்டுவது உலக அமைதி நிலைக்கவே. உலகிற்கு இன்று தேவையானது போா் அல்ல, அமைதிதான். ரமலான் நாளில் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முன்னேற்ற கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சியால் 80 விழுக்காடுக்கும் மேற்பட்ட மக்கள் திருப்தி அடைந்துள்ளனா். எனவே இந்தத் தோ்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

அதிமுக கூட்டணியில் அடிக்கடி தில்லி சென்றுதான் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். தமிழகம் வந்து கூட்டணி குறித்து தெளிவாகப் பேசுவதில்லை. எனவே, தமிழக முதல்வா் கூறியதைப் போன்று தில்லிக்கும், தமிழகத்துக்குமான போட்டியாக மாறியுள்ளது. இந்த மண்ணில் பாஜக கொள்கைக்கு எப்போதுமே இடமில்லை. தாமரை மலா்வது குளத்திலும் குட்டையிலும்தான். தமிழ்நாடு ஒரு பெருங்கடல். இதில் தாமரை மலர முடியாது என்றாா் அவா்.