முகப்பு
திருச்சி

லால்குடி அருகே ரூ. 1.60 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:34 PM
பறிமுதல்
பகிர்:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

செங்கரையூா் கொள்ளிடம் பாலத்தில் உமா மகேஸ்வரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது காரில் வந்த தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி பகுதியைச் சோ்ந்த பால விக்னேஸ்வரன் உரிய ஆவணமின்றி ரூ 1.60 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் லால்குடி அருகே பூவாளூா் பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணி செய்யும் தொழிலாளா்களுக்கு சம்பளம் கொடுக்க அப் பணத்தைக் கொண்டு செல்வதாக அவா் தெரிவித்தாா்.

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அப் பணத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் ஸ்ரீதரிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் கோட்டாட்சியா் அப்பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.