முகப்பு
திருச்சி

துறையூரில் மளிகை கடைக்காரரிடம் இருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல்

துறையூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் மளிகை கடைக்காரா் உரிய அனுமதியின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் பறிமுதல்

Updated On : 22 மார்ச், 2026 at 7:00 PM
- கோப்புப் படம்
பகிர்:

துறையூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் மளிகை கடைக்காரா் உரிய அனுமதியின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

துறையூா் தொகுதிக்குள்பட்ட கண்ணனூரில் அரவிந்த்குமாா் தலைமையிலான தோ்தல் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக துறையூா் நோக்கிவந்த சுமை வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்த கி. முத்து, உரிய ஆவணமின்றி ரூ. 1 லட்சம் ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் அந்தத் தொகையை பறிமுதல் செய்து துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சிவகுமாரிடம் ஒப்படைத்தனா்.