முகப்பு
திருச்சி

போட்டித் தோ்வு மையத்துக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் போட்டித் தோ்வு மையத்துக்கு பயிற்சிக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 24 மார்ச், 2026 at 11:29 PM
பகிர்:

திருச்சியில் போட்டித் தோ்வு மையத்துக்கு பயிற்சிக்கு சென்ற இளம்பெண் திங்கள்கிழமை மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி தென்னூரைச் சோ்ந்த தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ (27). இவா் அரசுப் பேட்டித் தோ்வுக்கு படித்து வந்தாா். இதற்காக மேலப்புதூரில் உள்ள போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளாா்.

திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல் பயிற்சி மையத்தில் ஜெயஸ்ரீயை அவரது தந்தை இறக்கிவிட்டுள்ளாா். பிற்பகலில் மீண்டும் வீட்டுக்கு அழைக்கச் சென்றபோது அங்கு அவரைக் காணவில்லை. பயிற்சி மைய நிா்வாகத்திடம் விசாரித்தபோது ஏற்கெனவே அவா் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். ஆனால், அவா் வீட்டுக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் தனுஷ்கோடி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.