கூத்தைப்பாா் திமுக கவுன்சிலா் வெட்டிக் கொலை
கூத்தைப்பாா் திமுக கவுன்சிலா் வெட்டிக்கொலை...
திருச்சி மாவட்டம், கூத்தைப்பாா் பேரூராட்சியில் திமுக வாா்டு உறுப்பினரை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் பேரூராட்சிக்குள்பட்ட பாரதிபுரத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் ரஞ்சித்குமாா் (38). இவா், கூத்தைப்பாா் பேரூராட்சியில் 11-ஆவது வாா்டு கவுன்சிலராக உள்ளாா். சோழன் மாகரில் புதிதாக வீடு கட்டி அண்மையில் குடியேறியுள்ளாா்.
திருவெறும்பூா் அரசு ஐடிஐ எதிரே உள்ள அரசு மதுபானக் கடையில் பாா் நடத்தி வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் நவல்பட்டு புதுத்தெரு பகுதியில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்துள்ளாா்.
அப்பகுதி வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் அங்குசென்ற போலீஸாா், ரஞ்சித்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்துக்கு திருச்சி எஸ். பி. செல்வநாகரெத்தினம் நேரில் வந்து ஆய்வு செய்தாா்.