முகப்பு
திருச்சி

ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

Updated On : 30 மார்ச், 2026 at 8:34 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.75,300-ஐ தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தா. பேட்டையில் முசிறி பிரிவு சாலை அருகே நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் சுகன்யா தலைமையில் பெண் தலைமை காவலா் உஷாராணி, தலைமை காவலா் ராஜா, இரண்டாம் நிலை காவலா் விவேக் ஆகியோா் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் நீலியாம் பட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (40) என்பவா் மருத்துவ உபகரணங்களை விற்று கிடைத்த ரூ. 75 ஆயிரத்து 300-ஐ வைத்திருந்தாா்.

Advertisement

உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து முசிறி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா். அவா் முசிறி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments