சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது
திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இருவரை மாவட்ட காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், கல்லக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கேசவன் என்பவரை கல்லக்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 386 மது பாட்டில்கள், ரூ.5,260 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முத்தரசநல்லூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஜீயபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, முத்தரசநல்லூரில் வீட்டுக்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த பாரி என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 168 மது பாட்டில்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.