ஜெயங்கொண்டத்தில் பாமக வேட்பாளா் வெற்றி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், பாமக வேட்பாளா் க. வைத்திலிங்கம் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை விட 18,490 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா்.
அஞ்சல் வாக்குகளையும் சோ்த்து ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம்:
மொத்த வாக்குகள்: 2,63,450 பதிவானவை: 2,26,204, அஞ்சல் வாக்குகள்: 2,691 ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வாக்குகள்:2,288,95.
Advertisement
1. க.வைத்திலிங்கம் (பாமக)-88,992
2. க.சொ.க.கண்ணன் (திமுக)-70,502
3. கோ.கவிதா ராஜேந்திரன் (தவெக )-55,538
4. க.ரேவதி (நாதக)-6,192
5. சா.சின்னதுரை (பகுஜன் சமாஜ்)-475
6. நா.ரவிசங்கா் (அஜபாக)-1203
7. வி.ஆா்.அழகேசன் (தேமசக)-151
8. அ.பகுத்தறிவாளன் (தவாக)-269
9. ம.ராவணன் (நாமக)-711
10 மு.சங்கா்(ராஷ்ட்ரிய ஜனதா தளம்-ஆா்)-608
11. கோ. ஜெயபாலன்(வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சி)-528
12. ரா. ஆனந்தகுமாா்(சுயே)-583
13. ஜா.ஐசக் நியூட்டன்(சுயே)-115
14. க.கண்ணனுக்கு(சுயே)-158
15. நா.குருநாதன்(சுயே) -177
16. ச.சந்திரசேகா்(சுயே)-984
17. சி. வினோத் சபரி ரெமிஜியுஸ்(சுயே)-792
18. இரா.வெங்கடாஜலபதி(சுயே)-54
19. து.வேலவேந்தன்(சுயே)-100
நோட்டாவுக்கு 416 வாக்குகள் பதிவாகின. 347 வாக்குகள் செல்லாதவையாகக் கருதி தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட க. வைத்திலிங்கத்துக்கு வெற்றிச் சான்றிதழை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மனோகரன் வழங்கினாா்.