முகப்பு
திருச்சி

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 12 ட்ரோன்கள் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 ட்ரோன்களை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 23 மே 2026, 2:24 am IST
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன்கள்.
பகிர்:

சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 ட்ரோன்களை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, இரண்டு பயணிகள் தங்களது உடைமைகளில் தலா 6 ட்ரோன்கள் வீதம் 12 ட்ரோன்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், சுங்கத் துறை பாதுகாப்புச் சட்டம் 1962-இன் படி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement