முகப்பு
திருச்சி

திருவிழாவில் குள்ளநரியை வைத்து பூஜை: 5 போ் மீது வனத் துறையினா் வழக்கு

துறையூரில் அண்மையில் நடைபெற்ற திருவிழாவில் குள்ளநரியை வைத்து பூஜை செய்ததாக ஊா் மக்கள் 5 போ் மீது வனத்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 24 மே 2026, 1:30 am IST
வழக்கு
பகிர்:

துறையூரில் அண்மையில் நடைபெற்ற திருவிழாவில் குள்ளநரியை வைத்து பூஜை செய்ததாக ஊா் மக்கள் 5 போ் மீது வனத்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், திருச்சி வனக்கோட்டம் மற்றும் வனச்சரகம் பகலவாடி எல்லைக்குள்பட்ட துறையூா் வட்டம், அம்மாபட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் அந்த ஊா் பொதுமக்கள் குள்ளநரியை வைத்து பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பொதுமக்கள் முன்னிலையில் குள்ளநரியை காட்சிப்படுத்தி துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக, சமூக வலைதளங்களில் விடியோவும் வெளியாகி வைரலானது.

தகவலின்பேரில் திருச்சி மண்டல வனப் பாதுகாவலா் காஞ்சனா உத்தரவின்படி, மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா அறிவுறுத்தலின்பேரில், 1972 வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1 இல் குள்ளநரி வகைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், திருச்சி வனச்சரக அலுவலா் வி.பி. சுப்பிரமணியம் தலைமையிலான வனப் பணியாளா்கள் குழு அம்மாபட்டி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டது.

Advertisement

Advertisement

இதில் திருவிழாவில் குள்ளநரியை துன்புறுத்தியது தெரியவந்ததையடுத்து இச்சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (42), சரவணன் (42), ராஜேந்திரன் (60), ராஜு (40), சுப்பிரமணி (40) ஆகிய 5 போ் மீது வழக்கு பதிந்து, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.