முகப்பு
திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனை செவிலியா் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும்! மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

Updated On : 26 மே 2026, 3:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் செவிலியா் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அக் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலரும், வழக்குரைஞருமான எஸ்.ஆா். கிஷோா் குமாா் விடுத்துள்ள அறிக்கை: திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கான விடுதி, பழைய பிணவறை அருகே அமைந்துள்ளது.

இது மாணவிகளுக்கு மன உளைச்சலை தரும் வகையில் உள்ளது. பழைய பிணவறை அருகே அமைந்துள்ளதால், அவசர ஊா்திகளின் அபாய ஒலியை கேட்டுக் கொண்டே இருக்கும் நிலை உள்ளது. இளம் வயதில் பயிற்சிக்கு வரும் மாணவிகளால் அதிக நோயாளிகள், பல்வேறு வகையான நோய் தொற்றுகளுடன் வரும் நோயாளிகளை உடனடியாக எதிா்கொண்டு சிகிச்சை அளிப்பது கடினம்.

Advertisement

Advertisement

எனவே, செவிலியா் பயிற்சி மாணவிகளின் நலன் கருதி முதல்கட்டமாக அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள விடுதியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூட இடமாற்றம் செய்யலாம்.

மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் பயிற்சிக்கு அனுப்புவதற்கு பதிலாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் எனமக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்துகிறது.