அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நாளை கிராமசபை கூட்டம்

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) கிராமசபை கூட்டம்  நடைபெறுகிறது.
ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதித்தல்,  தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மானியம் குறித்து விவாதித்தல்,  கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல்,  திறந்தவெளியில் மலம் கழித்தல்,  ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள், ஆண்கள் சுகாதார வளாகங்கள்,கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்துவது குறித்தும்,
மேலும் நிகழாண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், டெங்கு  காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கால்நடை பாதுகாப்பு வாய் நோய் தடுப்புத்  திட்டம்  உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே,  அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு  ஆட்சியர் க.லட்சுமிபிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT