அரியலூர்

மாநில பூப்பந்தாட்ட போட்டி: அரியலூரில் வரும்29-இல் வீரர்கள் தேர்வு

DIN

திண்டிவனத்தில் விரைவில் நடைபெறவுள்ள மாநில அளவிலான  ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரர்கள் தேர்வு வரும் 29 ஆம் தேதி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் நடைபெறும் வீரர்கள் தேர்வில்  கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 19 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும் (02-01-1998-க்கு பின் பிறந்திருக்க வேண்டும்).  குழுக்களாகவோ அல்லது தனி நபராகவோ வருபவர்கள் அன்று காலை 9 மணிக்குள் வர வேண்டும். போட்டிக்கு வரும்போது வயது சான்றினை கொண்டு வர வேண்டும். இதில் தேர்ந்து எடுக்கப்படும் வீரர்கள் திண்டிவனத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். எனவே இந்த அரிய வாய்ப்பினை பூப்பந்தாட்ட வீரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் செயலர் மணிவண்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT