அரியலூர்

ஜயங்கொண்டம் அருகே 3 ஆவது நாளாக டாஸ்மாக் கடை முற்றுகை

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த கீழகுடியிருப்பு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் 3 ஆவது நாளாக திங்கள்கிழமையும் அந்த கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜயங்கொண்டம் அருகே கீழகுடியிருப்பு அருகே மலங்கான் குடியிருப்பு செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட புதிய டாஸ்மாக் கடையால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக கூறி அந்த கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் சம்பந்தப்பட்ட அந்த கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து அவர்கள் 3 ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஜயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி மற்றும் ஜயங்கொண்டம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஒரு வாரத்துக்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT