அரியலூர்

வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலப் பணி தொடங்குமா?: 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம்

அரியலூர்-கடலூர் இடையே வெள்ளாற்றின் 14 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள உயர்மட்ட மேம்பாலப் பணிகளை உடனே தொடக்க வேண்டும்

சி.சண்முகவேல்

அரியலூர்-கடலூர் இடையே வெள்ளாற்றின் 14 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள உயர்மட்ட மேம்பாலப் பணிகளை உடனே தொடக்க வேண்டும் என இரு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அகேயுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களையும், அரியலூர் மாவட்டத்தில் 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களையும் ஒன்றிணைக்கும் பகுதியாக உள்ள சௌந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும், இதனால் அரியலூர் மக்கள் சென்னை செல்வதற்கு 30 கிலோ மீட்டர் பயணம் நேரம் குறையும் என இரு மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற முறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சௌந்திரசோழபுரம்-கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 14 கோடி செலவில் உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.ஆனால் நிதித்துறை இதுவரை ஒப்புதல் அளிக்காததால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் உள்ளது.
இந்த திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், சௌந்திரசோழபுரம்-கோட்டைக்காடு வரை வெள்ளாற்றின் குறுக்கே தனியார் சிமென்ட் ஆலைகள் உதவியுடன்,மக்களின் பங்களிப்புடன் செம்மன் சாலை அமைத்து இரு மாவட்ட மக்கள் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் அந்தச் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்வதும்,மீண்டும் சாலை அமைத்து அந்த சாலையில் சென்றுவரும் நிலைதான் உள்ளது.
இது குறித்து ஆலத்தியூர் பகுதி முன்னாள் கவுன்சிலர் முள்ளுக்குறிச்சி சிவப்பிரகாசம் கூறியது:
'இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் பெண்ணாடம் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது விடுமுறை எடுத்து வீட்டிலேயே தங்கி விடுகின்றனர்.
இது சம்பந்தமாக வெள்ளாற்றில் பாலம் அமைப்பு கமிட்டி ஏற்படுத்தி, இதற்குரிய ஆதாரங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பினோம். எங்களது கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,உயர்மட்ட பாலம் அமைக்க உத்தரவிட்டார்.
ஆனால் முதல்வர் உத்தரவிட்டு 4 ஆண்டுகளாகியும் பால கட்டுமானப் பணி இது வரை தொடங்கவில்லை. எனவே இப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகாமல் இருக்க பாலம் கட்டும் வரை தாற்காலிக பாலமாவது அமைக்க வேண்டும்.
இது குறித்து கிராம மக்கள் கூறியது : சௌந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டால் அரியலூர் - பெண்ணாடம் நகரத்தில் தொழில் வளர்ச்சி மேன்மையடையும். அரியலூர்,செந்துறை பகுதி மக்கள் பெண்ணாடம்,விருத்தாசலம்,சென்னை மற்றும் புதுச்சேரி சென்றுவர புதிய வழித்தடம் ஏற்படும். இதே போல் விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம்,பெண்ணாடம்,முள்ளுக்குறிச்சி செந்துறை வழியாக தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, மானாமதுரை செல்ல புதிய வழித்தடம் ஏற்படும்.
அப்படி ஏற்படும்பட்சத்தில் அரியலூர், பெண்ணாடம், தஞ்சைக்கு போக்குவரத்து பெருகும். இதனால் அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிடையும். எனவே நான்கு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இந்த உயர்மட்ட மேம்பாலத்திற்கான கட்டுமான பணிகளை துரிதமாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT