அரியலூர்

சீமைக் கருவைகளை அகற்ற சிமென்ட் ஆலைகளுக்கு உத்தரவிட கோரிக்கை

DIN

அரியலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் காணப்படும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிமென்ட் ஆலைகளுக்கு உத்தரவிட வேண்டும் என  மாவட்ட முதன்மை நீதிபதியிடம், சமூக ஆர்வலர் சோழன்குடி கணேசன் அண்மையில் மனு அளித்தார்.
அவர் அளித்த மனு: அரியலூர் மாவட்டத்திலுள்ள 7 சிமென்ட் ஆலைகள், தங்களது ஆலைகளுக்கு சுண்ணாம்புக் கல் வெட்டுவதற்காக அருகிலுள்ள விவசாயிகளிடம் 7 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கியுள்ளனர். அப்படி வாங்கிய நிலங்களில் சில பகுதிகளில் சுண்ணாம்புக் கல் எடுக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள நிலங்கள் தரிசாக, சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் உள்ளது.எனவே, மாவட்ட முதன்மை நீதிபதி, ஒவ்வொரு சிமென்ட் ஆலைகளுக்கும் தலா 10 ஊராட்சிகளை ஒதுக்கி, அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT