அரியலூர்

ஆமணக்கந்தோண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்

DIN

ஜயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.     
போராட்டத்துக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தியாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். கணேசன், கோவிந்தராசன், முத்து, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிவேல் மாவட்ட செயற்குழு மகாராசன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆமணக்கந்தோண்டி மற்றும் புதுச்சாவடி கிராமத்துக்கு மின்சாரம், குடிநீர், மயானப் பாதையை செப்பனிடுதல், தெருக்களில் மின்விளக்குகள் அமைத்து தருவது,  மக்களுக்கு 100நாள் வேலைஉறுதித் திட்டத்தில் நிலுவையில் உள்ள கூலி பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டியும், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கட்டுவது,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், அன்பழகன், மாதர் சங்க ஒன்றிய பொருளாளர் மணியம்மை ஆகியோர்  கலந்து கொண்டனர்.
 முன்னதாக ஒன்றியக்குழு உறுப்பினர் இராஜேந்திரன் வரவேற்றார்  முடிவில் ஒன்றியக்குழு அறிவழகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT