அரியலூர்

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி

DIN

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி டி.சுமதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பெற்றோரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 41 குழந்தைகளுக்கு நிதியுதவியாக தலா ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலங்களுக்கு ரூ. 2 லட்சத்து 46 ஆயிரத்துக்கான  காசோலைகளை ஆட்சியர் க.லட்சுமிபிரியா வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  கா.முகமது யூனுஸ் கான் உட்பட பலரும் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT