அரியலூர்

மக்காத குப்பைகளைப் பெற நகராட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது அல்ட்ராடெக்

DIN

அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளைப் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டது அல்ட்ராடெக் சிமென்ட் ஆலை நிர்வாகம்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா  முன்னிலையில்  நகராட்சி ஆணையர் வினோத்,  அல்ட்ராடெக் சிமென்ட் ஆலைத் தலைவர் கணேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
இதன் மூலம் அரியலூர் நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளை அல்ட்ராடெக் சிமென்ட் ஆலை நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.   அரியலூர் நகராட்சி கழிவுப்பொருள்கள், குப்பைகளைப் பாதுகாப்பாக  அப்புறப்படுத்துவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம்  மூலம் மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம்,  மாவட்டத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக வடிகால் சீரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT