அரியலூர்

ஏப்.21 முதல் அரியலூரில் கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்

DIN

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம்,ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏப். 21 ஆம் தேதி முதல் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  நிகழாண்டு மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஏப்.21 முதல் மே.11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏப்.21 முதல் மே.5 ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. காலை 6.30 முதல் 8.30 மணி வரை,  மாலை 4.30 முதல் 6 மணி வரை இந்தப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 21ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேற்கண்ட விளையாட்டு மைதானத்திற்கு வருகை தர வேண்டும்.
முகாமில், தடகளம்,  கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டகளில் பயிற்றுநர்கள் மற்றம் உடற்கல்வி ஆசிரியர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது.  பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு தினமும் பால், முட்டை, பிஸ்கெட் வழங்கப்படும். முகாமின் நிறைவில், டி. சர்ட்ஸ் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முதலில் வரும் மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு 74017 03499 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT