முந்திரி தொழிற்சாலையில் மே தினக் கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தனியார் முந்திரி தொழிற்சாலையில் அரியலூர் மாவட்ட சட்டப் பணிக்குழு மற்றும் வட்ட சட்டப்
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தனியார் முந்திரி தொழிற்சாலையில் அரியலூர் மாவட்ட சட்டப் பணிக்குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மே தினக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், ஜயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான பாரதிராஜா பங்கேற்று, மே தின சிறப்பு, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்து விளக்கினார். மேலும் அவர், தொழிலாளர்களுக்கான நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், தொழில் செய்யும் இடத்தில் வசதிகள், அனைவருக்கும் சமநீதி பெறுவதற்கு வசதியோ, பணமோ தடையில்லை எனத் தெரிவித்தார்.
வழக்குரைஞர்கள் உத்திராபதி, மாசிலாமணி, வேல்முருகன், ஜயங்கொண்டம் நீதிமன்ற ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மேலாளர் முரளி நன்றி கூறினார்.