ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலணிக்குழி கிராமத்தில், வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தில், காய்கறியில்
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலணிக்குழி கிராமத்தில், வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தில், காய்கறியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினார். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் அசோகர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கீதபிரியா, வேளாண் உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சிலம்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் தேவதாஸ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பயிற்சியில் மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி வரவேற்றார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் நன்றி கூறினார்.