முகப்பு
அரியலூர்

உலகத் தாய்மொழி நாள் பேரணி

உலகத் தாய்மொழி தின நாளையொட்டி அரியலூரில் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினர் புதன்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

உலகத் தாய்மொழி தின நாளையொட்டி அரியலூரில் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினர் புதன்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.
பேரணியானது, அரியலூர் அண்ணாசிலையில் தொடங்கி பிரதான சாலை வழியாகச் சென்று திருச்சி சாலையிலுள்ள கண்ணகி சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியின்போது, அரசுத் தேர்வுகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெற வேண்டும். அரசுப் பணிகள் அனைத்தும் தமிழ் வழிக் கல்வியாளர்களுக்கே வழங்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பேரணிக்கு புலவர் இர. அரங்கநாடன் தலைமை வகித்தார். கவிஞர் சீனி. அறிவுமழை பேசினர். அசாவீரன் குடிகாடு தலைமை ஆசிரியர் ம. ராவணன் பேரணியை தொடக்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →