அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வி.கைகாட்டி மற்றும் தேளூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குடிசல் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராஜாகிருஷ்ணன் (38),காட்டுப்பிரிங்கியம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்(42) ஆகிய இருவர் சட்ட விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸார் அவர்களை கைது செய்தனர்.